இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலருமான செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ம.ராமேஸ்வரன் தலைமையிலான இ.தொ.காவின் குழுவினர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ்வரதன ஷரிங்கலாக்கும் இடையிலான நட்பு ரீதியான சந்திப்பு நேற்று கொழுப்பில் இடம்பெற்றது.
இதன்போது பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கபடவிருக்கும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும்,கொட்டகலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகம் தொடர்பாகவும் அப் பல்கலைகழகத்திற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு பெருந்தோட்ட பகுதிகளின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலையக பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.