இதொகா வலதுசாரி கட்சி: நாம் கூட்டு சேர மாட்டோம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலதுசாரி கட்சியாகும். தமிழ் முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சியாகும். எனவே, நாம் எப்படி இணைவது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் அரசியல் விவாத நிகழ்வின்போதே அவர் இந்த வினாவை தொடுத்தார்.

மனோ மேலும் கூறியவை வருமாறு ,

“ இதொகாவும், முற்போக்கு கூட்டணியும் இணைய வேண்டும் என்ற தேவைப்பாடு இருப்பதாக நான் உணரவில்லை. அக்கட்சியினரின் அடிப்படை வேறு. எமது கட்சியினரின் அடிப்படை வேறு. அவர்கள் வலதுசாரி கட்சி. நாங்கள் இடதுசாரி பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி. எனவே, நாம் எப்படி இணைய முடியும்?
பொதுவான விடயங்களின்போது ஒன்றாக செயற்படலாம்.

மலையகத்தில் நான்கு பிரதான கட்சிகள் உள்ளன. அவற்றில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பன இணைந்துள்ளன.” – என்றார்.

 

Related Articles

Latest Articles