இதொகாவின் இரட்டை முகம் அம்பலம் – சிவநேசன் குற்றச்சாட்டு

” EPF, ETF நிதியங்களில் உள்ள பணத்தை நல்லாட்சி அரசாங்கம் விழுங்கபோவதாக அன்று விமர்சனம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இன்று அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிவநேசன் மேலும் கூறியவை வருமாறு,

” உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கையில் 25 இலட்ச மக்கள் பாதிப்படையக்கூடும். இதில் 2 லட்சம் மலையக தொழிலாளர்களும் உள்ளடங்குவார்கள்.

கடன் மறு சீரமைப்பினால் உள்ளூர் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. டிப்போசிட் (வைப்பு) செய்த பணத்திற்கும் பாதிப்பு இல்லை , பொன்ட எடுத்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் இந்த நாட்டிற்காக உழைத்த மக்களின் சேமலாப நிதியை கைவைக்க திட்ட மிட்டுள்ளது இந்த அரசு, அதற்கு
EPF ETF பணத்திற்கான வட்டி வீதத்தையும் குறைத்துள்ளது. இதற்கு ஆதரவாக மலையக கட்சி வாக்களித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது யானை EPF ETF பணத்தை தின்று விட்டது என்று பொய் பிரச்சாரம் செய்தவர்களே இன்று
அந்த பணத்தை சூறையாட ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மலையக மக்களுக்கு விடிவை பெற்று தருவோம் என்று கூறிகொண்டு இன்று எமது தோட்ட தொழிலாளர்களின் பணத்தில் கை வைக்க ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அரசில் அமைச்சு பதவியை எடுத்து கொண்டு எமது மக்களை காட்டி கொடுத்துவிட்டு சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள் போன்றோரை பாராளுமன்றம் அனுப்புவது எமது மக்களின் குற்றமே…” – என்றார்.

Related Articles

Latest Articles