இந்திய மீனவரின் சடலம் இன்று தமிழகத்துக்கு அனுப்பிவைப்பு!

யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

காரைநகர் – கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற்படையினரின் படகுடன் மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாகக் கடலில் மூழ்கியது.

இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல்போயிருந்தார். இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரைத் கடற்படையினர் 18ஆம் திகதி இரவு மற்றும. 19ஆம் திகதிகளில் தேடுதலில் ஈடுபட்டு 20 ஆம்திகதி நண்பகல் காணாமல்போன இந்திய மீனவர் இலங்கை கடற்படையினரால் உயிரற்ற உடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட உடலை காங்கேசன்துறைக்கு சென்ற தடயவியல் பொலிசார் மற்றும் நீதிபதி சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதன் பிரகாரம் 20ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவு பிரேத பரிசோதனையும் இடம்பெற்று நீரில் மூழ்கியதனால் உயிரிழந்த்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து உடலம் தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்றபோதும் தாமதம் உயிரிழந்த மீனவனுடன் பயணித்த ஏனைய இரு மீனவர்களையும் விடுவிக்குமாறு விடப்பட்ட கோரிக்கை காலதாமதம் கண்டது.

இந்தத் தாமதம் தமிழக மீனவர்களின் போராட்டங்கள் அதிகரிக்கக் காரணமானதால் இன்று உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் மட்டும் காங்கேசன்துறை ஊடாக இலங்கை கடற்படையினர் காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இந்திய கடற்படையிடம் உடலம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இவ்வாறு ஒப்படைக்கும் உடலம் இன்று பகல் 2 மணியளவில் உயிரிழந்தவரின் உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles