இலங்கை அரசின் நிதி ஒதுக்கீட்டிலான பெருந்தோட்ட வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்று இ.தொ.காவின் ஊடக இணைப்பாளர் சவரிமுத்து தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதிய கட்டுரை வருமாறு,
கொரோனா பரவல் பெருந்தோட்ட பிரதேசங்களில் ஊடுருவ நெருக்கமான லயன் வீடுகளில் மேக்கள் குடியிருப்பதே முக்கிய காரணமாக அமைகின்றது. இதேபோல அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்படுகின்றன. லயன் வீடுகளில் சுகாதார பிரச்சினைகளும் நிலவுகின்றன. இப்படி பல பிரச்சினைகளை பட்டியலிடலாம்.
இதனை கருத்திற்கொண்டு இ.தொ.கா நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே லயவரிசை வீடுகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று குரல் எழுப்பியும் ,வலியுறுத்தியும் வந்தது. அதிகாரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை நிறைவேற்றவும் செய்தது. குறிப்பாக தனி வீட்டு திட்டம் என முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை பெருந்தோட்டங்களில் அமைத்த தனித்துவம் இ. தொ. கா விற்கே உள்ளது.
2004 ஆம் ஆண்டு கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் மாதிரி கிராமம் [modern village] நவீன வசதிகளைக்கொண்ட நாற்பத்துமூன்று 43 தனிவீடுகள் அமைக்கப்பட்டு அதனுடன் கூடிய சிறுவர்களுக்கான பாலர் பாடசாலை , மைதானம் ஆகியன இந்த மாதிரி கிராமத்தில் உள்வாங்கப்பட்டமை ஆகும்.
முன்னைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சொற்ப வீடுகளில் பல்வேறு குறைப்பாடுகள் நிலவுவதை ஆய்வு செய்தபின் சீர்திருத்த வேண்டிய அவசியம் குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்களை இழந்த பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உடனடியாகவே தனி வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் தற்போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சுக்கு நிதியினை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட டிக்கோயா போர்டைய்ஸ் தோட்ட மக்களுக்கு புதிதாக தனித்தனி வீடுகளை கட்டிக்கொடுக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
வருகின்றன.
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலக்கொன்றை வரையறை செய்துக்கொண்டு இந்த தனி விட்டு திட்டத்தை முன்னெடுக்க திட சங்கற்பம் கொண்டுள்ளார். ராஜாங்க அமைச்சரின் இந்த நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றமை பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகும். இதே நேரம் தடைப்பட்டு போயிருக்கும் இந்தியா வீடமைப்பு திட்டத்தையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சும் எதிர் நோக்கும் பாரிய சவால்தான் முன்னைய அரசங்க காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் காணப்படும் சீர்கேடுகளை சரி செய்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவைகளை புறக்கணிக்க முடியாது. அவ்வாறான நிலைமையை தமது வீடமைப்பு திட்டத்தின் கீழ் இடம்பெற்று கூடாதென்பதில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மிகவும் அவதானமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஹட்டன் போர்டைஸ் தோட்டத்தில் பத்தொன்பது வீடுகளும், லிந்துலை பம்பரக்கல மத்திய பிரிவில் இருபத்தைந்து வீடுகளும் , தலவாக்கலை சென் கிளயர் ஸ்டேலின் தோட்டத்தில் ஆறு வீடுகளும், ஹட்டன் இன்ஜஸ்ரி பிலிங்போனி பிரிவில் ஏழு வீடுகளும் , கொட்டகலை கிறிஸ்லஸ் பார்ம் பிரிவில் பனிரெண்டு வீடுகளும்,ஹட்டன் றொக்கில் பொனக்கோர்ட் பிரிவில் பனிரெண்டு வீடுகளும் லிந்துலை டிலிக்கூல்ற்ரி மவுசேல்ல பிரிவில் பத்து வீடுகளும் அமைய பெறவிருக்கின்றன ஒட்டுமொத்தமாக ஹட்டன் பிராந்தியத்தில் தொன்னூற்றோரு வீடுகள் அமையப்பெறவுள்ளன.
நுவரெலியா பிராந்தியத்தில் ஹொலிரூட் ஈஸ்ட் பிரிவில் இருபத்தி நான்கும் அக்கறைப்பதனை சந்திரிகமம் தோட்டத்தில் பதினொன்றும்,பெல்மொரால் தோட்டத்தில் பனிரெண்டும்,டயகம ஈஸ்ட் மூன்றாம் பிரிவில் எட்டும் கிளரண்டன் அவோக்க பிரிவில் நான்கு வீடுகளும் அமைக்கப்பட உள்ளன.
மலரப்போகும் 2021ஆம் ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தர தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் திட சங்கற்பம் கொண்டுள்ளார் என்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்.
