இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்: ட்ரம்ப் கவலை

 

“இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்தது. இதனால் இந்தியா – அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக பேச பல முறை முயன்றதாகவும், ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நெருக்கமாக உரையாடினர். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவியது.

இந்த போட்டோவை ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பகிர்ந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ” இந்தியாவையும், ரஷ்யாவையும், மோசமான சீனாவிடம் இழந்து விட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு பின்பு சீனா, 2-ம் உலகப்போரின் 80-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ பேரணியை நடத்தியது.

 

Related Articles

Latest Articles