“இனப்பிரச்சினை தீர்க்கப்படும்வரை இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும், இப்பிரச்சினையை தீர்க்காவிடின் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.இனப்பிரச்சினை இருந்தது, அதனை தீர்த்தாலேயே சிங்கப்பூரை கட்டியெழுப்ப முடிந்தது என லீ குவான் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் எம்மிடம் இல்லை. தாய்நாடு முக்கியம். எனவே, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறவைக்கும்வரை ஓயமாட்டேன். செப்டம்பர் 21 ஆம் திகதி அவர் நிச்சயம் ஜனாதிபதியாவார்.” –என்றார்
