பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாக வெளிப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பொதுப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் வாய்ப்பு இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மகாசங்கத்தினர் சில காலமாக எதிர்பார்த்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.










