இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் 10 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் எனவும், அவர்கள் கௌரவமாக பதவி விலகிச் செல்ல வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ டயனா கமகேபோல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்ற மேலும் 10 இரட்டை குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் சபையில் உள்ளனர் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள், கௌரவமான முறையில் விலகிச்செல்ல வேண்டும்.
சட்டத்தை மதிக்காத நபர்களை கட்சியின் பிரதிநிதிகளாக சேர்த்துக்கொள்ளாமல் இருக்கும் பொறுப்பு கட்சித் தலைவர்களுக்கு உள்ளது. எனவே, உறுப்பினர்களை தெரிவுசெய்யும்போது அவர்கள் பற்றி ஆராயப்பட வேண்டும்.” – என்றார்.










