இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும், சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையேயான பந்தம் என்பது ”ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே”னு வரிகள் எழுதி கொண்டாடுற அளவுக்கு அன்பால் நிரம்பியது.

அதற்கு எடுத்துக்காட்டாய் கடந்த 2023 ஐபிஎல் பைனலில் தோனிக்காக சிஎஸ்கே ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களுக்காக தோனியும் மாறிமாறி அன்பை பறிமாறிக்கொண்ட விதம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2023 ஐபிஎல் பைனல்தான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கப்போகிறது என்று தெரிந்ததும், தோனியின் மீதான அதீத பாசத்தால் இறுதிப்போட்டி நடந்த அகமதாபாத்துக்கு படையெடுத்தனர் சிஎஸ்கே ரசிகர்கள். மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டி முடிவதற்கு 3 நாட்கள் ஆனபோதும், மழை-வெயில் என எதையும் பார்க்காமல் கொசுக்கடியில் ரயில்வே ஸ்டேஷனில் படுத்தெழுந்து தோனியின் வெற்றியை கண்ணில் கண்ணீரோடு கொண்டாடினர் சிஎஸ்கே ரசிகர்கள்.

ரசிகர்களின் இவ்வளவு அன்பையெல்லாம் கவனித்த தோனி, ”5வது ஐபிஎல் கோப்பையை வென்று அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியை சமன்செய்தாச்சு, முழங்காலிலும் பெரிய காயம் பார்த்தாச்சு, இதைவிட ஓய்வை அறிவிக்க சிறந்த தருணம் இருக்கமுடியாது. ஆனால், இவ்வளவு அன்புகாட்டும் சென்னை ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று தன் முடிவை மாற்றிக்கொண்டார். இப்படி தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் என இரண்டு தரப்பும் அன்பை மாற்றிமாற்றி வெளிக்காட்டியதை நாம் அதிகமுறை பார்த்திருக்கிறோம்.

ஆனால் தற்போது சிஎஸ்கே அணிக்காகவும், அதன் எதிர்காலத்திற்காகவும் “கேப்டன்சி பொறுப்பு வேண்டாம்” என தோனி எடுத்திருக்கும் பெரிய முடிவு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் தானெடுத்த ஒரு முடிவுக்காக தோனி எந்தளவு தன்னுடைய விருப்பத்தை கூட விட்டுவிட்டு அணிக்காக நிற்கிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்றைய போட்டியில் தோனி செய்த ஒரு சம்பவம் எல்லோரையும் பிரமிக்க வைத்துவிட்டது.

சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில், ருதுராஜுக்கு எதிராக முதல் ஓவரை அற்புதமாக வீசிய ஓமர்சாய், ஒரு ஸ்விங்கிங் டெலிவரியில் சிஎஸ்கே கேப்டனை சிக்கவைத்தார். ஆனால் கைக்கு வந்த எளிதான கேட்ச்சை கோட்டைவிட்ட சாய் கிஷோர், அணியை முதல் ஓவரிலேயே தோல்விக்கு அழைத்துச்சென்றுவிட்டார். அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் எல்லாமே குஜராத் அணிக்கு சாதகமாக சென்றிருக்கும்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ருதுராஜ் ஒருபுறம் நிலைத்துநிற்க, மறுமுனையில் சிக்சர், பவுண்டரிகள் என சிதறடித்த ரச்சின் ரவிந்திரா, டெவான் கான்வே திரும்ப வந்தாலும் நான்தான் நிரந்தர ஓப்பனர் என சொல்லுமளவு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ரச்சின், 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 46 ரன்கள் குவித்து வெளியேறினார்.

ரச்சின் வெளியேறியதும் களத்திற்கு வந்த சிவம் துபே, ”அவர் அடிச்சதுலாம் அடியே இல்ல; இப்போ நான் அடிக்கிறன் பாருங்க” என 5 சிக்சர்களை பறக்கவிட்டு சிக்சர் துபேவாக மாறினார். ருதுராஜ் 46 ரன்களும், துபே 23 பந்துகளுக்கு 51 ரன்களும் அடித்து வெளுத்துவாங்க 206 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

207 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில், எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக சோபிக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய குஜராத் வீரர்கள், மிடில் ஓவர்களில் கிட்டத்தட்ட 26 பந்துகளாக ஒரு பவுண்டரியை கூட அடிக்கமுடியாமல் தடுமாறினர். மோசமாக செயல்பட்ட டைட்டன்ஸ் அணி ஆட்டத்தின் முடிவில் 143 ரன்கள் மட்டுமே அடித்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.

விஜய் சங்கருக்கு எதிராக ஒரு அசாத்தியமான கேட்ச்சை எடுத்த எம்எஸ் தோனி, 42 வயதில் “உங்களுக்கு இன்னும் வயசே ஆகல” என சொல்லுமளவு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஒரு கடினமான கேட்ச்சை எளிதாக காட்டிய தோனி, நான்தான் இப்போதும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை நிரூபித்துள்ளார்.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles