இரத்தினபுரி, சென் ஜோக்கிம் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள்!

-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை –

TRI, சென் ஜோக்கிம் பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

 

சென் ஜோக்கிம் தோட்டத்தை சேர்ந்த கொவிட் -19 நோய்த் தோற்றலர்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு சென் ஜோக்கிம் இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இதன்போது இ.தொ.கா இளைஞர் அணி இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் வினோதன் செல்லதுரை, அமைப்பாளர்களான அபிலாஷ் சௌந்தர்ராஜன் மற்றும் சுதர்சன் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் முன் வந்து மக்களுக்கு உதவி செய்யும் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு சென் ஜோக்கிம் தோட்ட மக்கள் நன்றி தெரிவித்ததாக ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles