இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலையை அமைப்பதற்கு தேவையான காணி கிடைக்கப்பெற்றுள்ளது.
இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கமைய, பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடமும், பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்திடமும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய 5 ஏக்கர் அளவிலான காணியினை பெற்றுக்கொடுக்க பலாங்கொடை பெருந்தோட்ட கம்பெனி இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரத்தினபுரி பிரதேசத்திற்கு பாரிய மழை வீழ்ச்சி பதிவான நிலையில், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளானது.
அதனைத் தொடர்ந்த குறித்து பாடசாலையின் அதிபர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளுக்கு அறிவித்ததற்கமைய அவர், பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமான் மற்றும் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து பல தரப்பட்ட முயற்சிகளின் பலனாக இரத்தினபுரி புதிய நகரத்தினை அண்மித்த பாம்கார்டன் தோட்டத்தின் வெரழுப்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து ஏக்கர் காணி கிடைக்கப்பெற்றுள்ளது.
