இரத்தினபுரி, நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலய வகுப்பறைகள்மீது பழுதடைந்த முட்டைகள் மதுபான போத்தல்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வழமை போல் குறித்த பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகளை காலை சுத்தம் செய்ததற்காக மாணவர்கள் சென்ற போது, வகுப்பறைகளில் பழுதடைந்த முட்டைகள் , மதுபான போத்தல்கள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனால் அந்த பிரதேசம் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும். ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட பாடசாலையில் பல வருடங்களாக காணி பிரச்சினை ஒன்று இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்
கடந்த வாரம் பாடசாலைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட போதிலும் பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து காணியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை பிரதேச மக்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இவ்வாறான இழி செயலும் இடம்பெற்றுள்ளது.