இரத்தினபுரி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளை அண்மித்துள்ள மக்கள், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மற்றும் ஏற்கனவே வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles