இராஜாங்க அமைச்சரின் செயல் பாரிய மனித உரிமை மீறல்

ஒரு இராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும் ஒரு செயல், ஒரு கிரிமினல் செயல்.

பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசாங்கத்தின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இதற்கு பதில் கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீடர், முகநூல் தளங்களில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பியின் டுவிட்டர் பதிவு வருமாறு,

ஒரு ராஜாங்க அமைச்சர் #அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், #தமிழ்_கைதிகளை முழந்தாளிட செய்துள்ளார். இதொரு பாரிய #மனித_உரிமை மீறிய கிரிமினல் செயல். #பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் #LKA அரசின் வக்கிர மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி #கோதா @GotabayaR பதிலளிக்கணும்.

Related Articles

Latest Articles