இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக கைதுசெய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் ஊடாகவே மேற்படி வலியுறுத்தலை அக்கட்சி விடுத்துள்ளது.
அத்துடன், சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, சி.ஐ.டியில் நேற்று முறைப்பாடொன்றை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.