இறக்குவானை உக்குவத்த பிரதேசத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அத் தொற்றாளர்களில் பாடசாலை மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இறக்குவானை உக்குவத்த பிரதேசம் உட்பட டெல்வின் ஏ பிரிவு, மஸ்இம்புல வீதி, இறக்குவானை உக்குவத்த வீதி மூடப்பட்டுள்ளது.
கடந்த 29 ம் திகதி இறக்குவானை உக்குவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துக் கொண்ட இரத்தினபுரி மல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக PCR பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உக்குவத்த பிரதேசத்தில் 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இறக்குவானை பொலிசார் உக்குவத்த பிரதேசம் மூடப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர்.இதனால் இப் பகுதியில் தற்காலிக பயணத்தடை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். குறித்த மாணவன் இ/அஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் கல்வி பயில்வதால் பாடசாலை மூடப்படாத போதிலும் அச்சம் காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையினால் பாடசாலை வெறிச்சோடியுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது.










