இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் STF – ‘நிர்வாகத்தின் கடிதம்’ குறித்து தோட்ட மக்கள் பொலிஸில் முறைப்பாடு

இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் தமது தோட்டத்துக்கு வந்தனர் என்பதை தோட்ட மக்கள் உறுதிப்படுத்தினர்.

தொழிலாளர்களுடன் தோட்ட நிர்வாகத்தினர் இன்று மாலை பேச்சு நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர். இச்சந்திப்பு மாலை 3 மணிக்கு தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே விசேட அதிரடிப்படையினர் இன்று முற்பகல் அங்கு சென்றுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது.

தமக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்படாமல் இருப்பதால் அந்த விடயம் உட்பட தொழில் உரிமைகளைக்கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வேலைக்கு வராவிட்டால், சுய விருப்பின்பேரில் வேலையை விட்டு விலகியவராக கருதி, தோட்ட பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கப்படும் எனவும், தோட்ட லயன் அறைகள் மீள நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எனக் கூறப்படும் தரப்பால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இக்கடிதம் வெளியான பிறகு, அந்த தோட்ட விவகாரம் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இக்கடிதம் தொடர்பில் தோட்ட மக்கள் இன்று கொத்மலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தாம் ஏன் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனவும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது தொடர்பிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு நிலைவரம் பற்றி ஆராயவே தாம் வந்ததாக தோட்ட மக்களிடம் விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். தற்போது தோட்டத்தில் இருந்து வெளியெறியுள்ளனர் என அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோது, விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றது தொடர்பில் தமக்கு தெரியாது, ஆனால் அந்த தோட்டம் தொடர்பில் மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆர்.சனத்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles