ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகின்றது.
இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும்.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டியை எட்டி விட்டதால் அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
இலங்கை அணி சூப்பர்4 சுற்றில் வங்காளதேசத்திடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.










