இலங்கை ,தென்னாபிரிக்கா – முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார். தென்னாபிரிக்க அணியை குவின்டன் டி கொக் வழிநடத்துகிறார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் இந்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகமானது எனத் தோன்றுகிறது. இவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடாவும் காயமடைந்துள்ளார். இன்றைய ஆட்டம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வீரர்கள் வெற்றி மனப்பான்மையுடன் களமிறங்குவதாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலங்கை அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதேபோன்று இந்த முறையும் சாதிக்கும் முனைப்புடன் அந்த அணி ஆயத்தமாகி வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இலங்கை அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

Related Articles

Latest Articles