இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் – நாமல் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை– பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேசுக்கு அறிவித்துள்ளது.

இருப்பினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 7 நாட்கள் தனிமைப்படுத்தலையே விரும்புகிறது. கடந்த நான்கு மாதகாலமாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாதுள்ளதால் பயிற்சிக்காலத்தை மேலும் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் இடையில் இது தொடர்பில் நீண்ட காலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலும் ஊடகங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச, மேலும் கூறியதாவது, இந்த கிரிக்கெட் தொடர் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் குறித்த தகவல்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்ட சூழல் காணப்படுகிறது.

தற்போது டுபாயில் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதேபோன்று இங்கிலாந்திலும் போட்டிகள் நடைபெறுகின்றன. கிரிக்கெட் வீரர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சில தினங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விளையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை – பங்களாதேஷ் தொடரை நடத்த முடியுமான கேட்டறியுமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளேன். இருதரப்பினரும் இணைந்து ஒரு முடிவை எடுப்பார்கள் என்றார்.

Related Articles

Latest Articles