இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது முன்னோடி முயற்சியான ‘Rata Purama LANKAQR’ஐ காலி மாவட்டத்திலுள்ள வணிகர்களுக்கு விஸ்தரித்துள்ளது, நாட்டிலுள்ள 21 முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பங்காளர்களின் பங்களிப்புடன் HNB PLC இந்த விளம்பர பிரசார நடவடிக்கையை முன்னெடுத்தது.
இந்த தேசிய பிரசார செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் HNB PLCஇன் தலைமையில் காலி மஜிஸ்திரேட் சதுக்கத்தில் நடைபெற்றது. கையடக்க தொலைபேசி ஊடான கொடுப்பனவு செயலி (App) மற்றும் நாடு முழுவதிலும் டிஜிட்டல் கொடுப்பனவுக்கான தரமான LANKAQR குறியீட்டை அறிமுகம் செய்ய இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த நாடு முழுவதுமான ‘Rata Purama LANKAQR’ மும்முயற்சியின் மூன்றாம் கட்டமாக இது அமைவதுடன், இதனூடா பணமில்லாத கொடுப்பனவு முறை மற்றும் டிஜிட்டல் ஆர்வமுள்ள சமூகத்தை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறையாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒட்டுமொத்த உட்பார்வையை முன்னேற்றுவிக்கும் இந்த பிரசாரத்திற்கு பல உயர் அதிதிகள், உயர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், நகரத்திலும் அதனை சுற்றியுள்ள முக்கிய வர்த்தக நிலையங்களையும் உள்ளடக்கிய நகர அளவிலான பிரசாரங்கள் இதில் அடங்கும். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமது பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு தேவையான LANKAQR குறியீடுகள் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளரால் அங்குள்ள வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
LANKAQR என்பது இலங்கை மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்ட பொதுவான துரித பிரதிபலிப்பு (QR) குறியீடாக இருப்பதால், வணிகர்களுக்கு இனி வெவ்வெறு தளங்களுக்கு பல QR குறியீடுகள் தேவையில்லை. LANKQR உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு டிஜிட்டல் கட்டண பயன்பாட்டையும் பயன்படுத்தி குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் LANKAQR ஊடாக பணம் செலுத்த முடியும். பணம் செலுத்தப்பட்டு முடிந்தவுடன் வணிகருக்கு ஒரு குறுந்தகவல் ஊடாக பணம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வார்.
கடந்த ஆண்டு இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் 160,000 வணிகர்கள் LANKAQRஐ ஏற்றுக் கொண்டனர், இது 85,000 POS எல்லைகளை இணைக்க 30 ஆண்டுக்கும் மேலாக எடுத்த அட்டைத் துறையுடன் ஒப்பிடும் போது இந்த அமைப்பை இது விரைவாக ஒருங்கிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு வணிகர் அல்லது சேவை வழங்குநருக்கும் அவர்களின் டிஜிட்டல் கட்டண செயலி (App) மற்றும் தளங்கள் மூலம் விரைவான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டண டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு LANKAQR உதவுகின்றது. வாடிக்கையாளர்களுக்கான மளிகைப்பொருட்கள், சுகாதார பாதுகாப்பு முதல் பயன்பாடுகள் வரை, மற்றும் தெரு ஓர விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவது போன்ற அனைத்து தேவைகளுக்கும் பணம் செலுத்தும் பொறிமுறையை இது வழங்குகிறது. எந்தவொரு LANKAQR இணக்கமான கையடக்க தொலைபேசி செயலியை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக கொடுப்பனவுக்கான தொகை செலுத்தப்படும்.
HNBஇன் தலைமையில் இடம்பெற்ற பிரசார நிகழ்விற்கு பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, கௌரவ அதிதியாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தேசமாண்ய பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா, இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட LANKA QR குழுவின் தலைவர் மற்றும் சனச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலக் பியதிகம மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் – கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம், தர்மஶ்ரீ குமாரதுங்க ஆகியோருடன் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம் நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதான் அலஸ், HNBஇன் நிறைவேற்று பணிப்பாளரும் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான டில்ஷான் ரொட்றிகோ மற்றும் HNBஇன் சில்லறை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு வங்கி நடவடிக்கைகளுக்கான பிரதி பொதுமுகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் பெரும்பாலான முக்கிய நிதி நிறுவனங்களால் LANKAQRஐ ஏற்றுக் கொள்வது இலங்கையர்களுக்கான பாதையில் ஒரு முற்போக்கான படியாகவும், இது தவிர்க்க முடியாத டிஜிட்டலில் இருக்கும் எதிர்காலத்தை முழுமையாக தழுவியுள்ளதோடு, படிப்படியாக முற்றிலும் பணமில்லாத பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.