வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 மார்ச் மாதத்தில் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம், 2023 மார்ச்சில் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது மார்ச் 2022 இல் பதிவான வரவுகளுடன் ஒப்பிடுகையில் 78.5% (249.9 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிகரிப்பாகும்.
