இலங்கையின் பொருளாதார மீட்சி…! ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்

பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ( JISA)
ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் தனியார் துறை மேம்பாட்டு பங்காளிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2022 டிசம்பரில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல், பொருளாதார மற்றும் கட்டமைப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கத்துடன் கூட்டப்பட்டது.

நெருக்கடி நிலையிலிருந்து நிலையான வளர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்தல், முதலீடுகளை ஈர்த்தல், தனியார் மூலதனத்தை ஈடுபடுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அரசாங்கமும் இதில் பங்கேற்கேற்கும் தரப்பினரும் இலங்கைக்கு தாக்குப்பிடிக்கக் கூடியதும் அனைத்தையும் உள்ளடக்கியதுமான பசுமை அபிவிருத்திக்குத் தேவையான அர்ப்பணிப்பைப் பேணுதல் என்பன குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினர்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதானால் பல் தரப்பு நிதி நிறுவனங்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் அவசியம் என 2022 டிசம்பரில் நடைபெற்ற முந்தைய அமர்வில், உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் முடிவு செய்தனர்.

இதுவரை, இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டியுள்ளதுடன், பணவீக்கத்தைக் குறைத்தல், அந்நியச் செலாவணி பணப்புழக்க அழுத்தங்களைத் தளர்த்துதல் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத் திட்டத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி (EFF) உதவியுடனும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளின் ஆதரவுடன், அடிப்படை சட்டங்கள் இயற்றப்பட்டு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், சர்வதேச நிதிச் சந்தைக்குள் மீண்டும் பிரவேசதிக்கவும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இருப்பினும், வரையறுக்கப்பட்ட நிதி மூலங்கள் மற்றும் வெளிப்புற இடையூறுகள் காரணமாக, இந்த மீட்சிக்கான பாதை இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.

முன்னோக்கிச் செல்கையில் நிரந்த அபிவிருத்திப் பாதையொன்றை மீளப் பெறுவதற்காக, விரைவான மற்றும் போதுமான ஆழமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நுண் பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துதல் ஆகியவை நிலையான வளர்ச்சிப் பாதையை மீண்டும் பெறுவதற்கு அவசியம்.

அபிவிருத்தி பங்காளிகள் உட்பட தொடர்புடைய பங்குதாரர்களை உள்ளடக்கி இந்த சீர்திருத்தங்களை ஒருங்கிணைக்க தெளிவான மற்றும் சுருக்கமான செயல்திட்டம் இருப்பது,அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மீட்சியில் இருந்து நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் இலங்கைக்கான வளர்ச்சியின் மூலோபாய திசைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு கருத்துத் தெரிவித்தார்.

சீர்திருத்த முன்னுரிமைகள், முன்னேற்றம், சவால்கள் மற்றும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டி , நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிரிவர்தன, “2022 டிசம்பரில் நடைபெற்ற கடைசி வட்டமேசைக் கலந்துரையாடலில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுத்தல், கடன் தகுதியை மீட்டெடுப்பதற்கும் நடுத்தர மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிரதான ஸ்திரத்தன்மை செயற்பாடு என்பன தொடர்பிலான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கருத்துத் தெரிவித்தார். பலதரப்பு அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயல்படக்கூடிய அரசாங்கத்தின் சீர்திருத்த ஒருங்கிணைப்பு தளம்
குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க விசேட விளக்கமொன்றை வழங்கினார்.

இந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB) , ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ЛСА), ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச பங்காளிகள் மற்றும் தனியார் துறை அபிவிருத்திப் பங்காளிகள் போன்ற தரப்பினரால் இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உள்ளக செயற்பாட்டு அடிப்படையில் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தியதோடு இது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்த அமர்வில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர், அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த வட்டமேசை விவாதத்தில் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகளாக, உலக வங்கியின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியார்டே, தெற்காசியாவுக்கான உலக வங்கியின் உப தலைவர் மார்ட்டின் ரைசர், பலதரப்பு முதலீட்டு உத்தரவாத முகவர் நிறுவன (MIGA) நடவடிக்கை தொடர்பான உப தலைவர் ஜுனைட் கமால் அகமது , சர்வதேச நிதிக் கூட்டுத்தாபன (IFC)பதில் பிராந்தியப் பணிப்பாளர் ஷலப் தண்டன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான் , ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்கு, மத்திய மற்றும் மேற்கு பிராந்திய உப தலைவர் ஷிக்சின் சென்,ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பான (AIIB) உப தலைவர் கலாநிதி உர்ஜித் படேல், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவின் துணைத் தலைவர் லார்ஸ் பிரெடல், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராலய (JICA) மூத்த உப தலைவர் சசிரோ இமோடோ , ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID) உதவிக் கட்டுப்பாட்டாளர் அஞ்சலி கவுர், மற்றும் இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தவிர, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திரா, மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் அமிலன், வர்த்தக மற்றும் முதலீட்டு மேற்பார்வைக் குழுவின் தலைவர் அஜித் குணவர்தன, ஒரல் கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் குஷான் கொடித்துவக்கு, சென் அந்தனி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவன் ஞானம் ,நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் தலைவர் ஷெரின் காதர் ஆகியோர் இலங்கையின் தனியார் துறை அபிவிருத்தி பங்காளிகளாக இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles