இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார் – ஒப்பந்தம் கைச்சாத்து

கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் 147 கோடி) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது. அம்புலுவாவ உயிர் பல்வகைமை மையத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.

சீனா மெஷின்-பில்டிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இலங்கையின் முதல் கேபிள் கார் நிர்மாணிக்கப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles