கம்பளை , புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தீபாவளி தினத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 38 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

லெவலன் தோட்டத்தில் இருந்து இளைஞர் குழு ஒன்று மணிக்கட்டி தோட்டத்தில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்காக வருகை தந்துள்ளனர். இதன் போது அந்த பகுதியில் இருந்த இளைஞர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் இரு குழுக்கள் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது 5 பேர் காயங்களுக்குள்ளாகி கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மேலும் மூன்று பேர் கலஹா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தாக்குதல் ஏற்பட்ட இடத்தில் மது போத்தல்கள் மற்றும் கத்திகள், இரத்தக் கறைகள் இருப்பதை காணமுடிந்தது.
அத்தோடு அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள்ளே அதிக இரத்தக் கறைகளும் காணப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










