இவர்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி: ஞானசார தேரர் பகீர் தகவல்!

புலிகள் அமைப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒருவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கும் உளவாளியாக அவர் செயல்பட்டுள்ளார் எனவும் தேரர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியும் என நேற்று முன்தினம் கண்டியில் வைத்து ஞானசார தேரர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, பிரதான சூத்திரதாரி தொடர்பான சமிக்ஞைகளை தேரர் வெளிப்படுத்தினார்.

அவரிடம் இது தொடர்பில் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு,

கேள்வி – பிரதான சூத்திரதாரியை நீங்கள் உண்மையாலுமே அறிந்து வைத்துள்ளீர்களா?

பதில் – எனக்கு தெரியும் என நான் நினைக்கின்றேன்.

கேள்வி – பிரதான சூத்திரதாரியென ஒருவர் இருக்கின்றாரா?

பதில் – ஆம்.

கேள்வி – சஹ்ரானை பயிற்றுவித்தவரை தெரியுமா?

பதில் – ஆம். தெரியும்.

கேள்வி – சஹ்ரானை கொண்டுவந்தவரை தெரியுமா?

பதில் – தெரியும்.

கேள்வி – சஹ்ரானை வளர்த்துவிட்டவர் பற்றி தெரியுமா?

பதில் – ஒருவர் அல்ல பலரை பற்றி தெரியும்.
கேள்வி – பிரதான சூத்திரதாரியை இன்று (நேற்று) வெளிப்படுத்துவதற்கு நீங்கள் தயாரா?

பதில் – இந்த நபர்களை பற்றி பாதுகாப்பு தரப்புக்கும் தெரியும்.

கேள்வி – நபரா, நபர்களா?

பதில் – மூன்று நான்கு நபர்கள் உள்ளனர்.

கேள்வி – பிரதான சூத்திரதாரிகள் மூவரா, நால்வரா?

பதில் – இவர்களில் ஒருவர் பிரதான சூத்திரதாரியென நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

கேள்வி – தற்போது சிறையில் உள்ளவர்களா?

பதில் – சிறை வைக்கப்பட்டு, குற்றமற்றவர்களென விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி – நால்வரும் வெளியிலா உள்ளனர்?

பதில் – ஆம்.

கேள்வி – நால்வரும் தமிழரா, முஸ்லிமா, சிங்களவர்களா?

பதில் – நால்வரும் முஸ்லிம்கள்.

கேள்வி – இவர்களில் அரசியல்வாதிகள் உள்ளனரா?

பதில் – அரசியல் பாதுகாப்பு கிடைத்திருக்கக்கூடும்.

கேள்வி – இந்த நால்வருள் அரசியல் வாதிகள் உள்ளனரா?

பதில் – அதை நான் பிறகு சொல்கின்றேன்.
கேள்வி – இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?

பதில் – ஏ டூ இஸ்ட்வரை எல்லா விடயங்களையும் எனக்கு கூற முடியும். எனினும், தற்போது சுதந்திரமாக உள்ளவர்கள் நாட்டைவிட்டு தப்பிச்செல்லக்கூடும்.

பிரதான சூத்திரதாரியென கருதப்படும் நபர் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்தார். அவர் தொடர்பில் புலிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரச படைகளுக்கு தகவல் வழங்கும் உளவாளி இவரென சந்தேகித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து இவரை புலிகள் விரட்டினார்கள்.

இவர் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கும் நபராக செயல்பட்டுள்ளார். அவர்தான் சஹ்ரானை பயிற்றுவித்தார். துரதிஷ்டவசமாக அவர் இன்று வெளியில் உள்ளார்.” – என்றார்.

Related Articles

Latest Articles