ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படை நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதலில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 20 வயதுகளில் இருக்கும் மூவரே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மறுபுறம் கடந்த செவ்வாயன்று இஸ்ரேலிய படையினரின் சூட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்த மூன்று இளைஞர்களும் தமது கார் வண்டிக்குள் இருந்த நிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சிவில் உடை அணிந்த அதிகாரிகள் உட்பட இஸ்ரேலிய சிறப்புப் படையினர் நேற்று காலை ஆறு மணி அளவில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.










