இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது…

இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.நேற்றைய 4-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் குழுவினரை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related Articles

Latest Articles