ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ அனைத்து கட்சிகளும் இணைந்து, நாட்டின் நலன்கருதி இது தொடர்பான யோசனைiயை சபையில் முன்வைத்து அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.” – எனவும் ஐதேக பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.