நாட்டிலுள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான தீர்மானங்கள் அடுத்த வாரத்திற்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான பொருட்களின் விலைகளை குறிப்பிட்ட நிலையான மட்டத்தில் பராமரிக்க முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தமது விலை திருத்தத்தின் மூலம் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைத்துள்ளது.
எனவே, இதனை கருத்திற்கொண்டு இரண்டு நிறுவனங்களின் எரிவாயுக்கான ஒரே விலை குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.