தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி மேலதிக 60 வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. காலை முதல் மாலைவரை சட்டமூலம்மீது விவாதம் நடத்தப்பட்டு, இரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.