உள்ளாட்சி தேர்தல் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

உள்ளாட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலென சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும், அந்த தருணத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்ததன் காரணமாக தேர்தலை நடத்த முடியாமற்போனதற்கு வருந்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கும் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles