ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டாலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரசாத் டனிஷ் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
