அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் நேற்றிர (10) 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடுமுற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.
இரு வீடுகளிலும் இருந்த 07 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தின் போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் சிறு சிறு எரி காயங்களுக்கு உள்ளாகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் எரிவாயு கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பல மணி நேரத்திற்கு பின்பு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
க.கிசாந்தன்










