ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

யுத்தத்தின் போது தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக தங்கள் அவயவங்களை இழந்த பதுளை மாவட்ட இராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

‘ரணவிரு சேவா’ அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 91 இராணுவ வீரர்களுக்குச் இரண்டு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் உள்ளிட்ட ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக மொனராகலை மாவட்டத்தில் உள்ள 76 இராணுவ வீரர்களுக்கும் ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, ரணவிரு சேவா அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன அபேவர்தன உள்ளிட்ட இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

– நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜ்

Related Articles

Latest Articles