தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றது. எனவே, நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குமாறு ஊவா மாகாண ஆளுநரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை பரிசீலித்த பின்னர், நவம்பர் முதலாம் திகதி ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று மாகாணா கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.
இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும், விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளில், அந்நாளுக்குரிய கல்வி செயற்பாடு எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
ராமு தனராஜ்