எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட இரகசிய நகர்வு – விமல்

இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்கு காட்டிக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகிவருகின்றனர். எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்குரிய ஏற்பாடுகளும் இரகிசயமாக இடம்பெறுகின்றன – என்று உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன், இரண்டாவது சுதந்திர போராட்டத்தை ஆரம்பிக்க மக்கள் உத்தர லங்கா சபாகயவுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருளாதார கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை விற்பனை செய்யும் நிலை காணப்படுகின்றது. இலங்கை மின்சார சபையை 12 கூறுகளாக பிரித்து இந்திய நிறுவனங்களுக்கு விற்பதற்கு தயாராகின்றனர்.

இலங்கையையும், இந்தியாவையும் இணைப்பதற்குரிய பாதை பற்றியும் பேசப்படுகின்றது. விமான நிலையங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். அதேபோல இலங்கை மற்றும் இந்திய சுங்கங்களை இணைப்பதற்குரிய சாத்தியம் பற்றியும் பேசப்படுகின்றது.

இவ்வாறு இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இது நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் செயலாகும்.

எட்கா உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் கோரப்பட்டாலும் அவை வழங்கப்படுவதில்லை. இரகசியமான முறையில் உள்ளடக்கங்கள் இடம்பெற்றுவருகின்றன.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles