எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரணில் தாமதப்படுத்துவது ஏன்?

தனது கோரிக்கைக்கு அமைவாகவே அரசாங்கத்திற்கு எதி ரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுவதாக முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஏன் கொண்டு வரவில்லை என சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன வின வியபோதே ரணில் விக்கிரம சிங்க இவ்வாறு பதில்அளித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியி ருந்தன. ஏன் அதனை முன்வைக்கவில்லை என சபை முதல்வர் நேற்று வினவியபோது அதற்குப் பதிலளித்தார் ரணில் விக்கிரமசிங்க.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக வொஷிங் டனுக்குச் சென்றுள்ள நிதியமைச்சரின் உரைக்கு முன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது அபத்தமானது. எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாமதப்படுத்துமாறு நான் கேட்டுக் கொண்டேன். நிதி அமைச் சரின் உரைக்கு முன்பாக பிரேரணையைக் கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை. அவருடைய பேச்சுக்குப் பிறகு என்ன செய்யவேண்டும் என்றுநாம் ஒன்றுகூடி விவாதிக்கலாம் – என்றார்.

Related Articles

Latest Articles