எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையை பறித்த சனத் நிஷாந்தவுக்கு சபை அமர்வில் பங்கேற்க தடை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு இரு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

” இன்று முதல் இரு வாரங்களுக்கு சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவை காலத்தை இடைநிறுத்த உத்தரவிடுகின்றேன்.” – எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றும்போது, அவர் முன்னால் சென்று, ஒலி வாங்கியை மடக்கி, ஆவணத்தையும் சனத் நிஷாந்த பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles