எதிர்வரும் காலத்தில் அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில், வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில் தமக்கு உடன்பாடில்லை என குறிப்பிட்டார்.
2 இலட்சம் மெற்றிக் டன் நெல்லை களஞ்சியப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் அரசி விலையினை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.
அதேநேரம், விதை உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட 17 வகையான விதைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அதனை தெரிவு செய்யப்படும் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
