“இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா, ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கான மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடை பெறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என நிச்சயமா கத் தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது. என்ன செய்வதென ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியாமல் இருக்கும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் இடம்பெறும் என ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினர் ஆரம்பத்திலி ருந்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகக் கட்சிக ளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கூட்டணி அமைத்துக்கொண்டு ஜனாதி பதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒரு வரைக் களமிறக்குவது தொடர்பாகவும் கட்சிகளுக்கிடையில் பேசப்பட்டு வருகின் றன.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதிப் பதவியை இரத்துச் செய்வதற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சட்டத்தர ணிகள் குழுவொன்றை நியமித்து, அரச மைப்பில் திருத்தம் மேற்கொண்டு, ஜனாதி பதிப் பதவியை இல்லாமல் செய்வ தற்குத் தற்போது வேகமாகச் செயற்பட்டு வருகின்றார்.
இது தொடர்பாக தற்போது நாட்டுக்குள் பாரியளவில் பேசப்பட்டு வருகின்றது. அதனால் இவ்வாறான நிலையில், இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடை பெறுமா, ஜனாதிபதிப் பதவியை இல்லா மல் செய்வதற்கான மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என நிச்சயமாகத் தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது.
அதனால் தற்போ துள்ள நிலைமையில் என்ன நடக்கப் போகின்றது என எங்களுக்கு மாத்திர மல்ல, என்ன செய்வதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியா மல் இருக்கும். ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லா மல் செய்வதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்குச் சென்றால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாம் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்போம்.” – எனவும் மைத்திரி கூறினார்.