நீர் கட்டணம் செலுத்தாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை இன்று (20) கைவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நீர் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு பாடசாலைக்குமான நீர் விநியோகம் தடை செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தை செலுத்தும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறினார்.
நீர் கட்டணம் செலுத்தாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை தடை செய்வதற்கு இதற்கு முன்னர் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தீர்தானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
