” எனக்கு இருக்கும் சர்வதேச தொடர்பாலேயே என்னை அழிக்க முற்படுகின்றனர்” – மைத்திரி!

” என்னை கொல்லாமல் கொல்கின்றனர். எனக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாலேயே என்னை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கின்றனர். ” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெல்சன் மண்டேலாவை 27 வருடங்கள் சிறையில் அடைத்தனர். அவர் மீண்டு வந்து நாட்டின் ஜனாதிபதியானார். பண்டாரநாயக்கவை கொலை செய்தனர். ஶ்ரீமாவோ அம்மையாரின் குடியுரிமையை பறித்தனர். தற்போது என்னை அழிக்க பார்க்கின்றனர். எனக்கு எதிராக கருத்துகளை வெளியிடுபவர்களின் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles