விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் குரலுடன் க்ளிம்ப்ஸ் தொடங்குகிறது. போர்க்களம் போல் காட்சியளிக்கும் ஒரு பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் நடந்து வருகிறார்.
முறுக்கு மீசை கெட் அப் ‘மெர்சல்’ படத்தை நினைவுப்படுத்துகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.