எல்ல 9 வளைவு பாலத்துக்கு அருகே ரயில் மோதி 22 வயது யுவதி பலி! விபத்தா, தற்கொலையா?

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு தபால் ரயில் மோதி 22 வயது யுவதியொருவர் இன்று (25) உயிரிழந்துள்ளார்.

எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலக்கம் 109, முள்ளரராவ, கிடலெல்ல எல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 08.25 அளவில் எல்ல 9 வளைவு பாலத்தை கடந்து பதுளை நோக்கி ரயில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்த யுவதியின் சடலம் தெமோதர புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles