ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் திமுத் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 10 இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் பெற்ற கருணாரத்ன 12 ஆவது இடத்தில் இருந்து இரு இடங்கள் முன்னேறி 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

எனினும் டெஸ்டில் கருணாரத்னவின் சிறந்த தரநிலை 5ஆவது இடமாகும். சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னர் அவர் அந்தத் தரநிலையை பெற்றிருந்தார்.

அதேபோன்று இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைச் சதம் பெற்ற தினேஷ் சந்திமால் இரண்டு இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்தை பெற்றதோடு அஞ்சலோ மத்தியூஸ் நான்கு இடங்கள் சரிந்து 21ஆவது இடத்தில் உள்ளார்.

எனினும் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அபாரமாக துடுப்பெடுத்தாடி இரட்டைச் சதம் பெற்ற நியூசிலாந்து முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசெனை விடவும் அவர் 32 தரநிலை புள்ளிகளே குறைவாக உள்ளார்.

Related Articles

Latest Articles