ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தான் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐ.தே.கவின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பல தரப்புகள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் ஐ.தே.கவின் தலைமைப்பதவியில் இருந்து விலகும் முடிவை ரணில் விக்கிரமசிங்க எடுத்திருந்தார். இந்நிலையில் புதிய தலைவர் பதவிக்காக அக்கட்சியின் உறுப்பினர்கள் எட்டு பேர் போட்டியிடுவதற்காக விருப்பத்தை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், கருஜயசூரிய தலைமைப்பதவியை ஏற்கும்பட்சத்தில் போட்டியிலிருந்து அவர்கள் விலகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கருஜயசூரியவால் இன்று விடுக்கப்பட்ட விசேட அறிக்கை வருமாறு,











