ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளக் கூட்டம் இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது .
தமது கட்சி தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் முடிவுக்கு கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் அனுமதி பெறும் நோக்கிலேயே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே, குறித்த கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மீண்டும் ஐதேகவுக்கு திரும்பியுள்ள தலதா அத்துகோரள உள்ளிட்டவர்களுக்கும் விசேட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.










