ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான கட்சிகளில் இருந்து, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய விரும்புபவர்களை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தின்போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜீர அபேவர்தன, செயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைவரம் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அவ்வேளையிலேயே ஐ.தே.கவுடன் இணைய விரும்பும் பிரதான கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களை உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு கட்சி தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
